தூத்துக்குடியில் ஆசிரியை மகளிடம் தவறாக நடக்க முயன்றதாக திமுகவைச்சேர்ந்த முன்னாள் மாமன்ற உறுப்பினரை போலீஸார் கைது செய்தனர்.
தூத்துக்குடி டிஎம்பி காலனியைச் சேர்ந்தவர் ரகுநாதன் (45). திமுவைச்சேர்ந்த இவர் முன்னாள் மாநகராட்சி கவுன்சிலர் ஆவார். இவருக்கும் தூத்துக்குடி ஸ்டேட் பேங்க் காலனியை சேர்ந்த ஆசிரியை ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஆசிரியையின் வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்ற ரகுநாதன் அங்கிருந்த ஆசிரியையின் 15 வயது மகளிடம் தவறாக நடக்க முயன்றாராம். அந்த பெண் கூச்சல் போட்டதால் ரகுநாதன் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டாராம். இந்த சம்பவம் குறித்து வடபாகம் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. வழக்குப் பதிவு செய்த போலீஸார் தலைமறைவாக இருந்த ரகுநாதனை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.