முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி மாநிலக்குழு கூடியது

கூட்டத்திற்கு மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்பி தலைமை வகித்தார். கூட்டத்தில் கட்சி மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்,  மத்தியக்குழு உறுப்பினர்கள் கே.

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:13 AM
பகிர்:

சிதம்பரம் கடலூர் சாலையில் பைசல் மஹாலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழுக் கூட்டம் திங்கள்கிழமை கூடியது.

கூட்டத்திற்கு மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்பி தலைமை வகித்தார். கூட்டத்தில் கட்சி மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்,  மத்தியக்குழு உறுப்பினர்கள் கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ, ஏ,சவுந்திரராஜன் எம்எல்ஏ, பாலபாரதி எம்எல்ஏ, உ.வாசுகி, பி.சம்பத், மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட மாநிலக்குழு உறுப்பினர்கள் 92 பேர் பங்கேற்றனர்.

கூட்டத்தை மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி தொடங்கி வைத்துப் பேசினார். அவர் பேசியதாவது: கூட்டத்தில் 5 விஷயங்கள் வைக்கப்பட்டுள்ளது. உலக பொருளாதார நெருக்கடியினால் ஐரோப்பா மண்டலத்தில் 27 நாடுகளில் வேலையின்மை ஏற்பட்டுள்ளது. சுமார் இரண்டரை கோடி பேர் வேலையின்றி உள்ளனர். அமெரிக்க அதிபரகா ஒபாமா தேர்வு செய்யப்பட்டது குறித்தும், பாலஸ்தீனத்தின் இஸ்ரேல் கொலைவெறி தாக்குதல் குறித்தும், சீன கம்யூ கட்சி மாநாடு குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது. உலகளவில் பொருளாதார நெருக்கடி தொடர்ந்து நீடித்து வருகிறது. மந்தநிலை என்று சொல்வதை விட, வீழ்ச்சி நிதானமாக மெதுவாக நடைபெற்று வருகிறது எனக் கூறினார்.

மாநிலக்குழுக்கூட்டத்தை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் 15 இடங்களிலும் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றது. நாளை(ஜன.29) தேதி  மாலை சிதம்பரம் காந்திசிலை அருகே நிதியளிப்பு மற்றும் அரசியல் விளக்க பொதுக்கூட்டம், நகர கட்சி அலுவலக அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது. கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசுகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →