மொபட் மீது தனியார் பஸ் மோதல்: பிளஸ் 1 மாணவர் சாவு
தூத்துக்குடி முத்தையாபுரம் அம்மன்கோயில்தெருவைச் சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மகன் சுப்பிரமணியன் (16). எம்.தங்கம்மாள்புரத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1
தற்போதைய செய்திகள்மொபட் மீது தனியார் பஸ் மோதல்: பிளஸ் 1 மாணவர் சாவு
தூத்துக்குடி முத்தையாபுரம் அம்மன்கோயில்தெருவைச் சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மகன் சுப்பிரமணியன் (16). எம்.தங்கம்மாள்புரத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1
தூத்துக்குடியில் மொபட் மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் பிளஸ் 1 மாணவர் உயிரிழந்தார்.
தூத்துக்குடி முத்தையாபுரம் அம்மன்கோயில்தெருவைச் சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மகன் சுப்பிரமணியன் (16). எம்.தங்கம்மாள்புரத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த மணி மகன் ரூபன்ராஜா (15). இவர் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.இருவரும் நண்பர்கள் என்பதால் தினமும் அந்தப் பகுதிகளில் மொபட்டில் சென்று பத்திரிகை விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், ஸ்பிக் நகர் பகுதியில் இன்று(வியாழக்கிழமை)அதிகாலையில் இருவரும் பத்திரிகை விநியோகித்துவிட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனராம்.
அத்திமரப்பட்டி விலக்கு சாலையில் அவர்கள் சென்று கொண்டிருந்தபோது, தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் நோக்கிச் சென்ற தனியார் பஸ் மொபட் மீது மோதியதாம். இதில், இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில், சுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடந்தை ரூபன்ராஜா தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்து முத்தையபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.