விருதுநகர் அருகே பணம் வைத்து சூதாடியதாக 13 பேரை போலீஸார் கைது செய்ததோடு, அங்கிருந்த ரொக்கம் ரூ.15680 மற்றும் சீட்டுக்கட்டுக்களையும் சனிக்கிழமை இரவில் பறிமுதல் செய்தனர்.
விருதுநகர் அருகே முத்துராமன்பட்டி சாவடி தெருவோரத்தில் மறைவிடத்தில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருப்பதாக ரசகிய தகவல் வந்தது. அதன் அடிப்படையில் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் மூக்கன் தலைமையில் குறிப்பிட்ட பகுதிகளில் இரவு தீவிர ரோந்து சென்றனர். அப்போது சாவடி தெருவோரத்தில் உள்ள மரத்தடி மறைவிடத்தில் சூதாடிக் கொண்டிருந்தனர். அப்போது, அவர்களை சுற்றி வளைத்து போலீஸார் பிடித்தனர்.இப்பகுதியைச் சேர்ந்த ராஜ் என்பவரின் மகன் ரமேஷ்(34) என்பவர் தலைமையில் 13 பேர் ஈடுபட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது. உடனே அவர்கள் மீது வழக்கு பதிந்து கைது செய்ததோடு, சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த இடத்தில் ரொக்கப்பணம் மற்றும் சீட்டுக் கட்டுக்கள் உள்ளிட்டவைகளையும் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு வ்நதனர்.
அருப்புக்கோட்டையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது: அருப்புக்கோட்டை-தூம்பக்குளம் பகுதியில் சூதாட்டம் நடைபெற்று வருவதாக அருப்புக்கோட்டை நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கணேசனுக்கு ரகசிய தகவல் வந்தது. அதையடுத்து, இக்குறிப்பிட்ட பகுதியில் போலீஸார் திடீர் ரோந்து சென்றனர். அப்போது, கிராமத்தின் வெளிப்புறப்பகுதியில் கண்மாய் இறக்கத்தில் உள்ள தெருவிளக்கில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.அவர்களை போலீஸார் சுற்றி வளைத்து பிடித்தனர். அங்கிருந்த சீட்டுக் கட்டுக்கள், ரொக்கம் ரூ.660 ஆகியவைகளையும் பறிமுதல் செய்தனர். மேலும், போலீஸார் விசாரணையில் கஞ்சமநாயக்கன்பட்டி கிழக்குத் தெருவைச்சேர்ந்த பாலசுப்பிரமணியம் தலைமையில் 8 பேர் ஈடுபட்டிருந்தும் தெரியவந்ததால் அருப்புக்கோட்டை நகர் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.