விருதுநகர் மாவட்டத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வில் 4254 பேர் கலந்து கொண்டனர். 187 பேர் வரையில் தேர்வில் பங்கேற்கவில்லை.
தமிழகம் முழுவதும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு மூலம் நியமனம் செய்யப்படுகிறது. அந்த வகையில் இத்தேர்வு ஒவ்வொரு மாவட்டத்திலும் குறிப்பிட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் இன்று நடைபெற்றது. இதில், விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 4441 பேர் தேர்வெழுதுவதற்கு விண்ணப்பம் செய்திருந்தனர்.
அதன் அடிப்படையில் இத்தேர்வு விருதுநகர் பகுதியில் கேவிஎஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கேவிஎஸ் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, ஷத்திரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஹாஜிபி மேல்நிலைப்பள்ளி, அருப்புக்கோட்டையில் தேவாங்கர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சிவகாசி எஸ்.எச்.என்.கே.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, எஸ்.எச்.என்.கே.பெண்கள் மேல்நிலைப்பள்ளி, முஸ்லீம் மேல்நிலைப்பள்ளி, திருத்தங்கல் எஸ்.என்.பி.மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் மாவட்ட முதன்மைக் கல்வி மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த 9 தேர்வு மையங்களில் மொத்தம் 4254 பேர் தேர்வில் பங்கேற்றனர். அதில், 187 பேர் வரையில் தேர்வில் பங்கேற்கவில்லை.
எனவே இத்தேர்வில் பங்கேற்பதற்காக ஆர்வத்துடன் காலையில் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே முதுகலை பட்டதாரி ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் தேர்வு மையத்திற்கு வந்தனர். இவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் தேர்வு மையங்களில் செய்து கொடுக்கப்பட்டிருந்ததாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்(பொறுப்பு) அமுதவள்ளி தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.