முகப்பு
தற்போதைய செய்திகள்

கிருஷ்ணகிரியில் புகையிலை பொருள்கள் பறிமுதல்

கிருஷ்ணகிரி மற்றும் காவேரிப்பட்டணம் பகுதியில் விற்பனைக்கு வைத்திருந்த ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பான் மசாலா, குட்கா பொருள்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து அழித்தனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:55 PM
பகிர்:

கிருஷ்ணகிரி மற்றும் காவேரிப்பட்டணம் பகுதியில் விற்பனைக்கு வைத்திருந்த ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பான் மசாலா, குட்கா பொருள்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து அழித்தனர்.

கிருஷ்ணகிரி நகரம் மற்றும் காவேரிப்பட்டணம் பகுதியில் உள்ள கடைகளில் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் கலைவாணி தலைமையில் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ராஜசேகர், சாமிநாதன், துளசிராமன், சிவசந்திரன் ஆகியோர் கொண்ட குழுவினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

 அப்போது, கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா உள்ளிட்ட புகையினை பொருள்களை பறிமுதல் செய்து அழித்தனர். அவற்றின் மொத்த மதிப்பு ரூ.50 ஆயிரம் ஆகும்.

இந்த சோதனையில், 0 சதவீதம் நிகோடின் அல்லது புகையிலை பொருள்கள் விற்பனை செய்வதற்கு மாவட்ட நியமன அலுவலரின் அனுமதி பெற வேண்டும். மேலும், ஆய்வக பரிசோதனையில் உறுதிபடுத்தப்பட்ட பிறகு விற்பனை செய்ய வேண்டும். அவ்வாறு அனுமதியில்லாமல் விற்பனை செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு அலுவலர் கலைவாணி எச்சரித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →