ரோந்து போலீஸாரை மிரட்டியவர் கைது..
அவனியாபுரத்தில் இரவு நோந்து போலீஸாரை பணி செய்யவிடாமால் தடுத்து தகாத வார்த்தை பேசியவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
அவனியாபுரத்தில் இரவு நோந்து போலீஸாரை பணி செய்யவிடாமால் தடுத்து தகாத வார்த்தை பேசியவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
அவனியாபுரத்தை அடுத்த வில்லாபுரம் பகுதியில் அவனியாபுரம் சப்இன்ஸ்பெக்டர் கலையரசி,ஏட்டு ரகுராமன் மற்றும் போலீஸார் இரவு ரோந்து பணியில் இருந்த போது வில்லாபுரம் பத்மா திரையரங்கு அருகில் இருந்த ஹோட்டல் இரவு 11.30 மணி வரை திறந்திருந்ததாம்.அதனை போலீஸார் அடைக்க கூறியபோது ஹோட்டல் உரிமையாளர் சந்திரன் அடைக்க முடையாது என கூறியதுடன்,போலீஸாரை தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டினாராம்.இதையடுத்து போலீஸாரை பணிசெய்யவிடாமல் தடுத்த குற்றத்திற்காக ஹோட்டல் உரிமையாளர் சந்திரன் கைது செய்யப்பட்டார்.