தற்போதைய செய்திகள்

விடுமுறை நாளில் செயல்பட்ட பட்டாசு ஆலைக்கு சீல் வைத்து நடவடிக்கை

விருதுநகர் அருகே ஓ.கோவில்பட்டியில் காட்டுப்பகுதியில் கண்ணன் பயர் ஒர்க்ஸ் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையை பூச்சகப்பட்டியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவருக்கு சொந்தமானது ஆகும்

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே விடுமுறை நாளில் விதிமுறை மீறி செயல்பட்ட தனியார் பட்டாசு ஆலைக்கு சீல் வைத்து வட்டாட்சியர் நடவடிக்கை எடுத்தார்.

விருதுநகர் அருகே ஓ.கோவில்பட்டியில் காட்டுப்பகுதியில் கண்ணன் பயர் ஒர்க்ஸ் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையை பூச்சகப்பட்டியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவருக்கு சொந்தமானது ஆகும். இந்நிலையில் விருதுநகர் வட்டாரப் பகுதியில் வாடியூர், முதலிப்பட்டி, வி.முத்துலிங்காபுரம், கன்னிசேரி, மத்திசேனை உள்ளிட்ட பகுதிகளில் பட்டாசு ஆலைகளை விருதுநகர் வட்டாட்சியர் மங்களநாதன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அப்போது, ஓ.கோவில்பட்டியில் தனியார் பட்டாசு ஆலையில் அலுவலகத்திற்கு முன்பிருந்த தாழ்வாரத்தில் அமர்ந்து 3 பெண்கள் உள்ளிட்ட 4 பேர் சீனி பட்டாசுகளைக் கொண்டு சரம் பின்னும் வேலையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதிகாரிகள் வருவதை பார்த்ததும் அப்படியே போட்டு விட்டு ஓடிவிட்டனர். இதையடுத்து, அரசு விதிமுறையை மீறி விடுமுறை நாளில் செயல்பட்ட பட்டாசு ஆலைக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர். மேலும், இது தொடர்பாக மேல் நடவடிக்கை எடுப்பது குறித்து வட்டாட்சியர் மங்களநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் முனுசாமிக்கு பரிந்துரை செய்து அறிக்கை அனுப்பி வைத்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவுடன் இடைக்கால வா்த்தக ஒப்பந்தம்: பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு!

மாற்றம் பெறும் மதிப்பீட்டு முறை!

தமிழகத்தில் 2,506 முகாம்கள் மூலம் 3,09,707 பேருக்கு வேலைவாய்ப்பு!

தில்லியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: தமிழகத்தில் இருந்து 6 போ் உள்பட 8 போ் கைது!

இடையறா பயணத்தின் 'மைல்கல்' தேர்தல்!

SCROLL FOR NEXT