முகப்பு
தற்போதைய செய்திகள்

குண்டேரிபள்ளம் அணை அருகே ஆண் யானை சாவு

கோபியை அடுத்த குண்டேரிப்பள்ளம் அணை அருகே யானை சாவு.

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:01 PM
பகிர்:

கோபியை அடுத்த குண்டேரிப்பள்ளம் அணை அருகே யானை சாவு.

யில் கடம்பூர், மாக்கம்பாளையம், குன்றி, விளாங்கோம்பை போன்ற மலைப்பகுதிகளில் பெய்யும் மழைநீர் இந்த அனையில் சேகரமாகும். தற்போது மலைப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருவதால், குண்டேரிப்பள்ளம் அணையை ஒட்டியுள்ள வனப்பகுதியிலிருந்து யானைகள் மாலை நேரத்தில் தண்ணீர் குடிக்க இந்த அணைக்கு வந்து செல்கின்றன.

இந்த காட்சியை அப்பகுதியில் உள்ள பொதுமக்களும், சத்தி, கோபி, டி.என்.பாளயைம் உட்பட பல்வேறு பகுதியில் உள்ள பொதுமக்கள் பார்த்துச் செல்கின்றனர். குண்டேரிப்பள்ளம் அணைக்கு தண்ணீர் குடிக்க வந்த 20 வயது மதிக்கத்தக்க ஆண் யானை தண்ணீர் குடித்த பின்னர், சிறிது தூரம் நடந்து சென்றது.

அதன் பின்னர், அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தது. இதுகுறித்து பங்களாப்புதூர் வனத்துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார், வனவர் சந்திரசேகரன், பங்களாப்புதூர் ரேஞ்சர் தங்கப்பழம் மற்றும் கோவை கால்நடை டாக்டர் மனோகரன் ஆகியோர் இறந்து கிடந்த 20 வயது மதிக்கத்தக்க ஆண் யானையை பார்த்தனர்.

பிரேத பரிசோதனைக்குப் பின் யானை வனப்பகுதியில் பொக்லைன் இயந்திரம் மூலம் குழி தோண்டி அடக்கம் செய்ப்பட்டது. யானைக்கு குடற்பழு நோய் தாக்குதல் காரணமாக இறந்துள்ளது தெரியவந்தது. கடந்த மே மாதம் 18 ம் தேதி அதே இடத்தில் பெண் யானை ஒன்று இதே போல் குடற்புழு நோய் தாக்கி கீழே விழுந்து இறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →