தற்போதைய செய்திகள்

சேலம் அருகே பால் வேன் - பைக் மோதல்: 3 பேர் சாவு

தருமபுரி மாவட்டம் அரூர் அருகேயுள்ள கீரிப்பட்டியைச் சேர்ந்தவர் திருப்பதி மகன் சீனிவாசன் (26). வீராணம் பகுதியில் முடி திருத்தும் கடை வைத்துள்ளார். இவரது நண்பர்கள் கடத்தூரைச் சேர்ந்த ஆர்.ராமலிங்கம் (27).

க. தங்கராஜா

சேலத்தை அடுத்த சுக்கம்பட்டியில் வெள்ளிக்கிழமை பால் வேன் - பைக் மோதிக் கொண்ட விபத்தில் முடி திருத்தும் கடை உரிமையாளர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தருமபுரி மாவட்டம் அரூர் அருகேயுள்ள கீரிப்பட்டியைச் சேர்ந்தவர் திருப்பதி மகன் சீனிவாசன் (26). வீராணம் பகுதியில் முடி திருத்தும் கடை வைத்துள்ளார். இவரது நண்பர்கள் கடத்தூரைச் சேர்ந்த ஆர்.ராமலிங்கம் (27).ஓமலூரைச் சேர்ந்த சுரேஷ் (25). ராமலிங்கம் மணல் மேடு பகுதியிலும் சுரேஷ் அழகாபுரத்திலும் முடி திருத்தும் கடை வைத்துள்ளனர்.

இந்த நிலையில் சீனிவாசன் புதிதாக மோட்டார் சைக்கிள் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இன்று கடை விடுமுறை என்பதால் நண்பர்கள் இருவரையும் அந்த பைக்கில் ஏற்றிக் கொண்டு கீரிப்பட்டிக்கு சென்றுவிட்டு மீண்டும் சேலம் திரும்பிக் கொண்டிருந்தார்.வழியில் ஆச்சாங்குட்டப்பட்டி அருகேயுள்ள கோமாளி வட்டம் என்ற இடத்தில் வந்த போது, பைக்கும் சேலத்தில் இருந்து அரூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த பால் வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் பைக்கில் பயணம் செய்த சீனிவாசன், ராமலிங்கம், சுரேஷ் ஆகிய மூவரும் அதே இடத்தில் உயிரிழந்தனர்.

இது குறித்த தகவல் கிடைத்ததும் விரைந்து சென்ற வீராணம் காவல்துறையினர் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.சம்பவ இடத்தில் இன்று பிற்பகலில் மழை பெய்து கொண்டிருந்ததால் இந்த விபத்து நேரிட்டிருப்பதாக கூறப்படுகிறது. உயிரிழந்த சீனிவாசனுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இது குறித்து வீராணம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். இந்த விபத்தால் சேலம் - அரூர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review

தோ்தல் வந்துவிட்டால் பாஜக 'சோதனை' என்று சிபிஐயை பயன்படுத்தும்: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT