தருமபுரி அருகே புதையல் எடுத்துத் தருவதாக மோசடி: 4 பேர் கைது
தருமபுரி அருகே புதையல் எடுத்துத் தருவதாக மோசடியில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
தருமபுரி அருகே புதையல் எடுத்துத் தருவதாக மோசடியில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
தருமபுரி கிருஷ்ணாபுரம் அடுத்த வி.கொள்ளப்பட்டியில் மாதையன் என்பவரின் நிலத்தில் புதையல் இருப்பதாகவும், அதனை எடுத்துத் தருவதாக பண மோசடியில் ஈடுபட்ட தருமபுரியைச் சேர்ந்த ஒருவர், சேலத்தைச் சேர்ந்த 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஏற்கெனவே மாதையனின் மருமகன் நிலத்தில் இவ்வாறு மோசடி செய்து, அவாது மருமகனிடம் ரூ.80 ஆயிரம் பெற்றுச் சென்றுள்ளனராம்.
இந்நிலையில், அவர்களை அழைத்து தன் நிலத்திலும் அவ்வாறே அவர்கள் சொன்னதன் பேரில் போலீஸில் புகார் செய்தார் மாதையன். அதன் பேரில் சேலம் கீழமேட்டூரைச் சேர்ந்த சுப்பிரமணி, ரங்கராஜன், மாணிக்கம் மற்றும் தருமபுரி மாவட்டம் கொட்டுமாரனஹள்ளியைச் சேர்ந்த ராமசந்திரன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.