முகப்பு
தற்போதைய செய்திகள்

ஏரியில் மணல் கடத்த முயன்ற டிராக்டர் ஜே.சி.பி இயந்திரம் பறிமுதல்

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் அருகே சாலையன்கண்டிகை பகுதியில் உள்ள ஏரியில் இருந்து மணல் கடத்த முயன்ற இரு டிராக்டர் மற்றும் மணல் அள்ள பயன்படுத்திய ஜே.சி.பி இயந்திரத்தை ஆரம்பாக்கம் போலீஸார்

தற்போதைய செய்திகள்

ஏரியில் மணல் கடத்த முயன்ற டிராக்டர் ஜே.சி.பி இயந்திரம் பறிமுதல்

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் அருகே சாலையன்கண்டிகை பகுதியில் உள்ள ஏரியில் இருந்து மணல் கடத்த முயன்ற இரு டிராக்டர் மற்றும் மணல் அள்ள பயன்படுத்திய ஜே.சி.பி இயந்திரத்தை ஆரம்பாக்கம் போலீஸார்

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:08 PM
பகிர்:

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் அருகே சாலையன்கண்டிகை பகுதியில் உள்ள ஏரியில் இருந்து மணல் கடத்த முயன்ற இரு டிராக்டர் மற்றும் மணல் அள்ள பயன்படுத்திய ஜே.சி.பி இயந்திரத்தை ஆரம்பாக்கம் போலீஸார் இன்று அதிகாலை பறிமுதல் செய்தனர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் அருகே சாலையன்கண்டிகை ஏரியில் மணல் திருடப்படுவதாக வந்த தகவலை தொடர்ந்து சப் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் உட்பட போலீஸார் அங்கு சென்ற போது ஜே.சி.பி இயந்திரம் கொண்டு இரு டிராக்டர்களில் மணல் அள்ளப்படுவதை கண்டு அங்கு சென்றார்.போலீஸார் வருவதை கண்டதும் ஒரு டிராக்டரில் இருந்து டிரைவர் தப்பி ஓடினார். தொடர்ந்து போலீஸார் அங்கிருந்தவர்களை கைது செய்து விசாரித்ததில் எளாவூரை சேர்ந்த டிராக்டர் டிரைவர் நடேசன்(34), டிராக்டர் உரிமையாளர் முருகன்(35) மற்றும் ஜே.சி.பி இயந்திரத்தின் டிரைவர் ஆந்திர மாநிலம் காரூர் பகுதியை சேர்ந்த தினகரன்(28) என்பதும் தெரியவந்தது.

தொடர்ந்து 2 டிராக்டர்  மற்றும் ஜே.சி.பி இயந்திரத்தை பறிமுதல் செய்ததோடு கைது செய்யப்பட்ட மூவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து வழக்கு பதிவு செய்த ஆரம்பாக்கம் போலீஸார் இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தியதோடு தப்பியோடிய ஒரு டிராக்டர் டிரைவர் மற்றும் அதன் உரிமையாளரை தேடி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →