தற்போதைய செய்திகள்

சேலையில் தீப்பிடித்து மூதாட்டி சாவு

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே மலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் துரைராஜ்(52). இவரின் தாயார் ராஜலட்சுமி(80). கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு இதே பகுதியில் இருக்கும் மகள்

எஸ். பாண்டியன்

அருப்புக்கோட்டை அருகே தூங்கிக் கொண்டிருந்த போது விளக்கை தட்டியதால் கவிழ்ந்து சேலையில் தீப்பிடித்ததில் மூதாட்டி படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே மலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் துரைராஜ்(52). இவரின் தாயார் ராஜலட்சுமி(80). கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு இதே பகுதியில் இருக்கும் மகள் வீட்டிற்குச் சென்றார். அங்கு வழக்கம்போல் நேற்று(திங்கள்கிழமை) இரவு வீட்டில் தூங்கியுள்ளனர். அப்போது, எதிர்பாரத விதமாக அருகில் இருந்த மண்ணெண்ணெய் விளக்கை தட்டிவிட்டாராம். அப்போது, சேலையில் தீப்பிடித்து எரிந்ததால் படுகாயம் அடைந்தார்.

பின்னர், உடனே அருகில் உள்ள அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்து மதுரைக்கு அனுப்பியுள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலையில் உயிரிழந்தார். இது தொடர்பாக மூதாட்டியின் மகன் அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் புகார் செய்ததன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review

தோ்தல் வந்துவிட்டால் பாஜக 'சோதனை' என்று சிபிஐயை பயன்படுத்தும்: கனிமொழி எம்.பி.

”மேஷ ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

Abhishek Sharma-விடம் Gautam Gambhir என்ன பேசினார்? | T20 World Cup Review

இஸ்ரேலுக்குச் செல்லும் பிரதமர் மோடி: நெதன்யாகுவுடன் புதன்கிழமை சந்திப்பு!

SCROLL FOR NEXT