முகப்பு
தற்போதைய செய்திகள்

இளம்பெண்ணை ஏமாற்றி 27 சவரன் நகை, ரூ.50 ஆயிரம் மோசடி: 3 பேர் மீது வழக்கு பதிவு

விருதுநகரில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை ஏமாற்றி 27 சரவன் நகை மற்றும் ரூ.50 ஆயிரமும் பெற்று திருப்பித் தராமல் மோசடி செய்த கணவன், மனைவி உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 6:00 PM

விருதுநகரில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை ஏமாற்றி 27 சரவன் நகை மற்றும் ரூ.50 ஆயிரமும் பெற்று திருப்பித் தராமல் மோசடி செய்த கணவன், மனைவி உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

இது தொடர்பாக போலீஸார் தரப்பி்ல கூறியதாவது: விருதுநகர் ஆத்துமேடு சிவந்திபுரத்தைச் சேர்ந்த அழகர்சாமியின் மகள் சரஸ்வதி(23). இவரும், பக்கத்து வீட்டைச் சேர்ந்த நாகராஜன் மனைவியான பரமேஸ்வரி(40) இருவரும் தோழிகள் ஆவார்கள். இந்நிலையில் கடந்த 12.12.2011 அன்று பரமேஸ்வரி தனது குடும்பச் செலவிற்கு அவசரமாக ரூ.1 லட்சம் வரையிலான பணம் தேவைப்படுவதாக சரஸ்வதியிடும் தெரிவித்தாராம்.

அப்போது, உடன் அவரது கணவர் நாகராஜன் மற்றும் உறவினர் குணசேகரன் உள்ளிட்டோரும் உடன் வந்துள்ளனர். அப்போது, வீட்டில் எனது தாய் தந்தை இல்லை என்றுள்ளார். அதற்கு அவர்களிடம் நாங்கள் சொல்வதாக கூறியதை உண்மையென நம்பிய சரஸ்வதி தன்னிடம் 5 சவரன் நகை கொடுத்துள்ளார். இதேபோல், குடும்ப கஷ்டத்தை கூறி பல்வேறு தவனைகளில் 27 சவரன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் பெற்றுள்ளனர். அந்த நகையை தனியார் நிதி நிறுவனத்தில் அடகு அடகு வைத்து பில்லை கொண்டு வந்து கொடுத்துள்ளனர்.

Advertisement

அதில், குணசேகரன் பேரில் அடகு வைத்துள்ளதாக கூறியும், எனது உறவினர்தான் எனவும் கூறியுள்ளனர். இந்த நிலையில் நகை மற்றும் பணத்தை  திருப்பித் தருமாறு பல்வேறு தடவை கேட்டாராம். ஆனால், அவர்கள் நகையை திருப்பி தரவில்லையாம். இனிமேல் பணம் நகை கேட்டால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினார்களாம். இது தொடர்பாக விருதுநகர் ஜே.எம்.2 நீதிமன்றத்தில் புகார் செய்தார். அப்போது, இந்த வழக்கை விருதுநகர் கிழக்கு காவல் நிலையம் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவி்டடார். அதன் பேரி்ல் பரமேஸ்வரி, கணவர் நாகராஜன் மற்றும் உறவினர் குணசேகரன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.