முகப்பு
தற்போதைய செய்திகள்

வாழப்பாடி அருகே இளம்பெண் படுகொலை

வாழப்பாடியை அடுத்த வெள்ளாளப்பட்டியில் கருமந்துறை செல்லும் வழியில் ஆலமரம் பிரிவு உள்ளது. இங்குள்ள ஓடை தரைப்பாலத்துக்கு அடியில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் கிடப்பதை அந்த

Updated On : 30 ஜூன், 2013 at 6:55 PM
பகிர்:

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே இளம்பெண் கழுத்தை நெரித்து படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

வாழப்பாடியை அடுத்த வெள்ளாளப்பட்டியில் கருமந்துறை செல்லும் வழியில் ஆலமரம் பிரிவு உள்ளது. இங்குள்ள ஓடை தரைப்பாலத்துக்கு அடியில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் கிடப்பதை அந்த வழியாகச் சென்றவர்கள் இன்று காலை கண்டுள்ளனர்.இதுகுறித்து உடனடியாக ஏத்தாப்பூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். அதில் அந்த பெண் கயிறு மூலம் கழுத்தை நெரித்து படுகொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை.

இறந்து கிடந்த பெண்ணின் வலது கையில் என்.ஜெயந்தி என்று பச்சை குத்தப்பட்டிருந்தது. அவரது கழுத்தில் தாலிக் கயிறு உள்ளது. இதையடுத்து மோப்ப நாய் கொண்டும் கைரேகை நிபுணர்களைக் கொண்டும் அந்த பகுதியில் சோதனை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து ஏத்தாப்பூர் காவல் ஆய்வாளர் கருணாநிதி வழக்குப் பதிவு செய்து விசாரிக்கிறார். இந்த சம்பவம் வெள்ளாளப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.