கும்மிடிப்பூண்டி அருகே திருமணம் நிச்சயித்த பெண்ணின் சாவில் தொடர்புடைய இளைஞர் கைது
கும்மிடிப்பூண்டியை அடுத்த பெரியபுலியூரில், திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட இளம் பெண், கிணற்றில் வியாழக்கிழமை பிணமாக மிதந்ததை தொடர்ந்து அந்த
தற்போதைய செய்திகள்கும்மிடிப்பூண்டி அருகே திருமணம் நிச்சயித்த பெண்ணின் சாவில் தொடர்புடைய இளைஞர் கைது
கும்மிடிப்பூண்டியை அடுத்த பெரியபுலியூரில், திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட இளம் பெண், கிணற்றில் வியாழக்கிழமை பிணமாக மிதந்ததை தொடர்ந்து அந்த
கும்மிடிப்பூண்டியை அடுத்த பெரியபுலியூரில், திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட இளம் பெண், கிணற்றில் வியாழக்கிழமை பிணமாக மிதந்ததை தொடர்ந்து அந்த பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக பரமசிவம்(20) என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்
கும்மிடிப்பூண்டி அடுத்த பெரியபுலியூரைச் சேர்ந்த மூர்த்தி மகள் சுகன்யா (18). இவருக்கும் இவரது உறவினர் மகனுக்கும் வருகிற மார்ச்-8ஆம் தேதி திருமணம் நடக்க இருந்தது.இந்நிலையில், வியாழக்கிழமை காலை பூச்செடியில் பூப்பறிக்க சென்ற சுகன்யா வீடு திரும்பவில்லை. அவர், அங்குள்ள ஒரு கிணற்றில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.
இவரது உடலை பாதிரிவேடு போலீஸார் கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி உள்ளனர். இந்நிலையில் சுகன்யாவின் மரணம் பல மர்மத்தை எழுப்பிய நிலையில் போலீஸாரின் விசாரணையில் சுகன்யாவின் மீது ஒரு தலை காதல் கொண்ட அதே பகுதியை சேர்ந்த கோவிந்தன் என்பவரின் மகன் பரமசிவம் சுகன்யாவிற்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையிலும் அவரை தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. அவரது தொல்லை தொடர்ந்துள்ள நிலையில் சுகன்யா தற்கொலை செய்த அன்றும் அவர் தொல்லை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் எங்கே திருமணத்திற்கு பின்பும் தனது வாழ்க்கையில் இவரது தொல்லை நீடிக்குமோ என்ற பயத்தில் சுகன்யா தற்கொலைக்கு தூண்டப்பட்டு கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து பரமசிவம் பாதிரிவேடு போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.