முகப்பு
தற்போதைய செய்திகள்

வன்கொடுமை சட்டத்தில் இளைஞருக்கு 7 மாதம் சிறை

:பெண்களை ஜாதி பெயரை சொல்லி திட்டிய வழக்கில் வன்கொடுமை சட்டத்தின் கீழ் இளைஞருக்கு 7 மாதம் சிறை தண்டனை விதித்து

Updated On : 5 மார்ச், 2013 at 8:47 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 4:12 PM

:பெண்களை ஜாதி பெயரை சொல்லி திட்டிய வழக்கில் வன்கொடுமை சட்டத்தின் கீழ் இளைஞருக்கு 7 மாதம் சிறை தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.

 கடலூர் அருகே புதுச்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மனைவி பானு (27). திருச்சோபுரம் பகுதியில் கடந்த 2011ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி  பானு, கீதா, வசந்தா உள்ளிட்ட 3 பேர் விறகு எடுத்து சென்றனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த குமரவேல்(25). பானுவை ஜாதி பெயரை சொல்லி திட்டியதோடு கத்தியை காட்டி மிரட்டி தங்க செயினை பறித்து சென்றதாக கூறப்படுகிறது.

 இதுகுறித்து புதுச்சத்திரம் போலீஸார் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை கடலூர் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது.  இதில் குமரவேலுக்கு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 7 மாத சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தராபதி உத்தரவிட்டார். 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.