தற்போதைய செய்திகள்

உலக மகளிர் தினம்: சரத்குமார் வாழ்த்து

உலகமகளிர் தினத்தை முன்னிட்டு,அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனர் ரா.சரத்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பா.​ பிரகாஷ்

உலகமகளிர் தினத்தை முன்னிட்டு,அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனர் ரா.சரத்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
  இதுகுறித்து வியாழன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில்

ஆணுக்குபெண் இளைத்தவரல்ல என்று நிரூபிக்கும் வகையில் அனைத்து துறைகளிலும் பெண்கள் ஈடுபட்டு முன்னேறி வருகின்றனர்.
 ஆயினும் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளும்,குற்றங்களும் நீக்கப்படவேண்டும். அவர்களுக்கு முழு சுதந்திரம் கிடைத்திட வேண்டும் என்பதில் எந்த மாற்றுகருத்தும் கிடையாது.
குறிப்பாக பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்கார குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் அளிக்கும் விதமாக சட்டங்கள் இயற்றுவதில் மத்தியஅரசு அக்கறை காட்ட வேண்டும்.
சுயதொழில் மற்றும் தொழில்முனையும் பெண்களுக்கு மேலும் பொருளாதார ரீதியான சலுகைகள் கூடுதலாக கிடைக்க செய்யவும்,நீண்டநாட்களாக நிறைவேற்றப்படாமல் இருக்கும்  பெண்கள் இடஒதுக்கீடு மசோதா இந்த ஆண்டில் நிறைவேற்றப்படவேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி  வலியுறுத்துகிறது.உலகமகளிர் தினத்தை முன்னிட்டு அனைத்து தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும் அன்பான மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் -என குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

குடும்பக் கட்டுப்பாடு குறித்த முதல் கவிதை

அறிவுடையோர்: துறவுநெறியில் மனம் செலுத்துவர்

SCROLL FOR NEXT