முகப்பு
தற்போதைய செய்திகள்

கும்மிடிப்பூண்டி அருகே பைக் திருட்டில் தொடர்புடைய 4 பேர் கைது: 10 பைக்குகள் பறிமுதல்

கும்மிடிப்பூண்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 6 மாதகாலத்தில் பல்வேறு பகுதிகளில் பைக் திருட்டுகளும், வழிப்பறி சம்பவங்களும் நடைபெற்று வந்த நிலையில்,

தற்போதைய செய்திகள்

கும்மிடிப்பூண்டி அருகே பைக் திருட்டில் தொடர்புடைய 4 பேர் கைது: 10 பைக்குகள் பறிமுதல்

கும்மிடிப்பூண்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 6 மாதகாலத்தில் பல்வேறு பகுதிகளில் பைக் திருட்டுகளும், வழிப்பறி சம்பவங்களும் நடைபெற்று வந்த நிலையில்,

Updated On : 3 ஜனவரி, 2024 at 9:35 AM
பகிர்:

கும்மிடிப்பூண்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பைக் திருட்டு உட்பட பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட தினேஷ்(21), தங்கராசு(21), செல்வம்(21), சரவணன்(21) ஆகிய 4 இளைஞர்களை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கும்மிடிப்பூண்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 6 மாதகாலத்தில் பல்வேறு பகுதிகளில் பைக் திருட்டுகளும், வழிப்பறி சம்பவங்களும் நடைபெற்று வந்த நிலையில், குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்யக் கோரி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ரூபேஷ்குமார் மீனா, மாவட்ட கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் மேற்பார்வையில் கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி ஜோஷ் தங்கையா தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் அசோக் மேத்தா, லோகநாதன் மற்றும் போலீஸார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படை போலீஸார் பல நாட்களாக ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில்  நேற்று கவரப்பேட்டை-சத்தியவேடு சாலையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்றுக்கொண்டிருந்த 4 பேரிடம் விசாரணை நடத்தினர்.இந்த விசாரணையில் அவர்கள் கும்மிடிப்பூண்டி அடுத்த தலையாரிப்பாளையம் தட்சிணாமூர்த்தி மகன் தினேஷ், துராப்பள்ளம் சுப்பிரமணி மகன் தங்கராசு, தலையாரிபாளையம் முனிவேல் மகன் செல்வம், கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரணியை சேர்ந்த ராஜா மகன் சரவணன் என்பதும், இவர்கள் கூட்டாக சேர்ந்து பைக் திருட்டு மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

தொடர்ந்து இவர்களிடம் நடத்திய விசாரணையின் பேரில் பல இடங்களில் இவர்கள் திருடிய 10 பைக்குகளை போலீஸார் கைப்பற்றியதோடு இவர்கள் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டு வைத்திருந்த 3 சவரன் தங்க நகைகளையும் கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட 10 பைக்குகளில் 9 பைக்குகள் பல்சர் பைக்குகள் என்பதும் அதில் 3 பைக்குகள் புதிய பைக்குகள் என்பதும் குறிப்படத்தக்கது. போலீஸார் கைப்பற்றிய 10 பைக்குகள் மற்றும் 3 சவரன் நகைகளின் மொத்த மதிப்பு சுமார் 8 லட்சம் ஆகும். தொடர்ந்து போலீஸார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கோர்ட்டில் ஒப்படைத்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →