தற்போதைய செய்திகள்

2012ம் ஆண்டிற்கான தேசிய விருது அறிவிப்பு: சிறந்த தமிழ் படமாக வழக்கு எண் 18/9 தேர்வு

தினமணி

2012ம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சிறந்த பிராந்திய மொழி படமாக வழக்கு எண் 18/9 படம் அறிவிக்கப்பட்டுள்ளது.மற்றும் சிறந்த ஒப்பனைக்கான விருதும் வழக்கு எண் 18/9 படம் தட்டிச் சென்றது.  விஸ்வரூபம் படத்திற்கு 2 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. சிறந்த நடிகருக்கான விருது பான் சிங் தோமர் படத்திற்காக இந்தி நடிகர் இர்பான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த திரைக்கதைக்கான விருதுக்கு கஹானி என்ற படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த படமாக பான் சிங் தோமர் தேர்வு செய்யப்பட்டுள்ளது.2012ம் ஆண்டுக்கான சிறந்த படமாக ஈகா என்ற தெலுங்கு படம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

கடந்த முறையைப் போலவே இந்த முறையும் தமிழ்ப் படங்களுக்கு ஐந்து விருதுகள் மட்டுமே கிடைத்துள்ளன. கமல்ஹாசன் தயாரித்து, இயக்கி, நடித்த "விஸ்வரூபம்', பாலாஜி சக்திவேல் இயக்கிய "வழக்கு எண் 18/9' ஆகிய படங்கள் தலா இரண்டு விருதுகளையும் பாலா இயக்கிய "பரதேசி' ஒரு விருதையும் பெற்றுள்ளது.

விஸ்வரூபம் படத்தில் சிறந்த நடன இயக்கத்தை வெளிப்படுத்திய பண்டிட் பிர்ஜு மகராஜ், தயாரிப்பு வடிவமைப்பை சிறந்த முறையில் செய்த லால்குடி என்.இளையராஜா, பூண்ட்டவீ தோர் டவீபாசஸ் ஆகியோர் விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

வழக்கு எண் 18/9 படத்தில் சிறந்த ஒப்பனை செய்த ராஜா விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது தவிர, சிறந்த பிராந்திய மொழிப் படத்துக்கான விருதும் இந்தப் படத்துக்குக் கிடைத்துள்ளது.

பரதேசி படத்தின் சிறப்பான ஆடை வடிவமைப்புக்காக பூர்ணிமா ராமசாமி விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

SCROLL FOR NEXT