முகப்பு
தற்போதைய செய்திகள்

அண்ணாமலைப் பல்கலை. மருத்துவர் சிதம்பரத்திற்கு அமெரிக்க விருது!

மருத்துவர் என்.சிதம்பரம் இங்கிலாந்து நாட்டின் உலக சுகாதார அமைப்பு அங்கத்தினராகவும், இந்திய உயர்கலைக்கழகத்தில் இருதய ஒலியியல் பிரிவில் தேர்வு உறுப்பினராகவும், ஜெனிவாவில் உள்ள உலக இருதய நிறுவன அமைப்பின் அங்கத்தினராகவும், உலக மருத்துவ அறிவியல் கலைக்கழக உறுப்பினராகவும், உயிர்

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:54 AM
பகிர்:

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவப்புல முதல்வர் டாக்டர் என்.சிதம்பரத்திற்கு அமெரிக்காவில் கடந்த மார்ச் 11-ல் நடைபெற்ற அமெரிக்கன் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் "ஃபெல்லோ ஆஃப் அமெரிக்கன் காலேஜ் ஆஃப் கார்டியாலஜி" (Fellow of American Cillege of Cardiology) என்ற விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவர் என்.சிதம்பரம் இங்கிலாந்து நாட்டின் உலக சுகாதார அமைப்பு அங்கத்தினராகவும், இந்திய உயர்கலைக்கழகத்தில் இருதய ஒலியியல் பிரிவில் தேர்வு உறுப்பினராகவும், ஜெனிவாவில் உள்ள உலக இருதய நிறுவன அமைப்பின் அங்கத்தினராகவும், உலக மருத்துவ அறிவியல் கலைக்கழக உறுப்பினராகவும், உயிர் மருத்துவ அறிஞர்களுக்கான இந்திய கூட்டமைபபின் உறுப்பினராகவும், இந்திய அரசின் பல்நோக்கு சுகாதாக களப்பணியாளர்கள் செய்லமுறைத்திட்டத்தில் புகையிலை தடுப்பு நோயியில் விழிப்புணர்வு கூட்டமைப்பு உறுப்பினராகவும் பொறுப்புகளை வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா இதய நோய் அமைப்பினப் நிறுவன உறுப்பினராக உள்ள இவர் தமிழகம் முழுவதும் இதய பரிசோதனை முகாமை நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கல்லூரி மருத்துவமனை இதய நோய் பிரிவில் தன்னுடைய மேற்பார்வையின் கீழ் இயங்கும் மார்பு வலிக்கான விரைவில் அணுகும் மருத்துவத்தை நிறுவி சிகிச்சை கிடைக்கும் நேரத்தில் 25 நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் கிடைக்கச் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →