விருதுநகரில் அட்டைப் பெட்டி நிறுவனம் மீது புகார்: ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஆட்சியரை முற்றுகை
விருதுநகரில் வெம்பக்கோட்டை ஊராட்சியைச் சேர்ந்த விளாமரத்துப்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் அட்டைப்
Updated On : 3 ஜனவரி, 2024 at 4:27 PM
விருதுநகரில் வெம்பக்கோட்டை ஊராட்சியைச் சேர்ந்த விளாமரத்துப்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் அட்டைப் பெட்டி நிறுவனம் ஒன்று, தனது நிறுவனத்தில் இருந்து வெளியேற்றும் கழிவுப் பொருள்கள், தண்ணீரால் குடிநீர் மாசுபட்டு, நிலம் மாசடைந்துள்ளதாகவும், அந்தப் பகுதியில் விவசாயம் பாழ்பட்டுப் போனதாகவும் புகார் கூறி நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரை மக்கள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.