விருதுநகர் அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞர் சாவு
விருதுநகர் அருகே தொழிற்சாலையில் மோட்டாரை இயக்கும் போது மின்சாரம் பாய்ந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விருதுநகர் அருகே தொழிற்சாலையில் மோட்டாரை இயக்கும் போது மின்சாரம் பாய்ந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது தொடர்பாக போலீஸார் தரப்பி்ல் கூறியதாவது: விருதுநகர் அருகே பெரிய பேராலி சாலையில் தனியார் பிளாஸ்டிக் பொருள்கள் செய்யும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் அருப்புக்கோட்டை அருகே திருநகரத்தைச் சேர்ந்த கணேசனின் மகன் முத்துவீரன்(19) வேலை செய்து வருகிறார். இவர் வழக்கம் போல் புதன்கிழமை இரவு பணி செய்வதற்கு ஆலைக்கு வந்தார். அங்குள்ள மோட்டாரை இயக்கும் போது வயரில் ஏற்பட்ட மின்கசிவால் திடீரென மின்சாரம் பாய்ந்தது.
இதில், சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்த நிலையில் அங்கு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கு சிகிச்சையளித்தும், பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக பாண்டியன் நகர் காவல் நிலையத்தில் உயிரிழந்தவரின் தம்பி முத்துக்குமார் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் எலெக்ட்ரிசியன் வசந்தகுமார், மேலாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
Advertisement