முகப்பு
தற்போதைய செய்திகள்

விருத்தாசலம் ஜங்கஷனில் 10-ம் வகுப்பு தமிழ் இரண்டாம் தாள் விடைத்தாள் பார்சல் சேதம்!

கடலூர் மாவட்டத்தில்  நேற்று நடைபெற்ற தமிழ் 2-ம் தாள் தேர்வின் விடைத்தாள்கள் திருச்சி மண்டல இயக்குநர்கள் அலுவலகத்திற்கு விருத்தாசலம் ஜங்கஷனில் உள்ள ஆர்.எம்.எஸ்

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:02 AM
பகிர்:

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஜங்கஷனிலிருந்து புறப்பட்ட ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து 10-ம் வகுப்பு விடைத்தாள்கள் கொண்ட பார்சல் கீழே விழுந்து சுக்குநூறாக சேதமுற்று கண்டெடுக்கப்பட்டது.

கடலூர் மாவட்டத்தில்  நேற்று நடைபெற்ற தமிழ் 2-ம் தாள் தேர்வின் விடைத்தாள்கள் திருச்சி மண்டல இயக்குநர்கள் அலுவலகத்திற்கு விருத்தாசலம் ஜங்கஷனில் உள்ள ஆர்.எம்.எஸ் போஸ்ட் ஆபீஸ் மூலம் பார்சல்கள்  நேற்று(வியாழக்கிழமை) நள்ளிரவு 2 மணிக்கு ராக்போர்ட் எக்ஸ்பிரஸில் ஏற்றப்பட்டது. ரயில் சிறுதுதூரம் சென்ற போது பார்சல் ஒன்று கீழே விழுந்ததாக தெரிகிறது. பார்சல் கீழே விழுந்தது குறித்து இன்று அதிகாலை வந்த திருச்சி ரயில் டிரைவர் கண்டுபிடித்து கூறியுள்ளார். அப்போது அதிகாரிகள் சென்று பார்த்த போது பார்சல் முற்றிலும் சேதமுற்று கிடந்ததை கண்டு அதிர்ச்சியுற்று, அதனை கண்டெடுத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேற்கண்ட பேப்பர் பார்சல் சிதம்பரத்தை அடுத்த பி.முட்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் எழுதிய விடைத்தாள்கள் எனக்கூறப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →