செக் மோசடி வழக்கு ஒன்றில் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு நாமக்கல் நீதிமன்றம் சென்ற மாதம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டிருந்தது.
வெங்கடாச்சலம் என்பவரிடம் நிலம் தருவதாக ரூ.2 லட்சம் வாங்கினாராம் பவர்ஸ்டார் சீனிவாசன். ஆனால் அவருக்கு நிலம் எதுவும் கொடுக்காமல் தாமதித்துள்ளார். இதனால் வெங்கடாச்சலம் பணத்தை திரும்பக் கேட்ட போது அவர் ஒரு செக்கை கொடுத்தார். ஆனால் இந்த செக் பணம் இல்லாமல் திரும்பியது. இதையடுத்து நாமக்கல் குற்றவியல் முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜோதி, சீனிவாசனை கைது செய்யுமாறு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். கடந்த மாதமே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோதும், அவரைக் கைது செய்யும் நடவடிக்கை தாமதமானது. இந்நிலையில், செக் மோசடி வழக்கு என்பதால், பவர் ஸ்டார் சீனிவாசன் சமரசம் பேச விரும்பினாராம். இதை அடுத்து சமரசப் பேச்சுக்கு வெங்கடாசலம் முன்வந்ததாகத் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.