தற்போதைய செய்திகள்

தென்காசி கீழப்புலியூர் தம்பிராட்டி அம்மன் கோவிலில் தேரோட்டம்

தென்காசி, கீழப்புலியூர் தம்பிராட்டி அம்மன் கோவிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.

பா.​ பிரகாஷ்

தென்காசி, கீழப்புலியூர் தம்பிராட்டி அம்மன் கோவிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.

கீழப்புலியூர் தம்பிராட்டி அம்மன் கோவில் சித்திரைப் பெருந் திருவிழா கடந்த23ம் தேதியன்று துவங்கியது. விழாவில் தினமும் அபிஷேகம், முழுக்காப்பு அலங்கார தீபாராதனை, சப்பரம் வீதிஉலா, அன்னதானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவின் 8ம் நாளான செவ்வாய்க் கிழமை காலையில் திருவோலக்க மண்டபத்தில் மொட்டை, மாவிளக்கு நேமிதங்கள் நடைபெற்றது.

புதன்கிழமை அதிகாலையில் தேரோட்டம் நடைபெற்றது. விழாவில் ஊர்ப் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவில் நிலையை வந்தடைந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ரா.கணபதி முருகன், தக்கார் ரெ.சா.வெங்கடேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

குடும்பக் கட்டுப்பாடு குறித்த முதல் கவிதை

அறிவுடையோர்: துறவுநெறியில் மனம் செலுத்துவர்

SCROLL FOR NEXT