தற்போதைய செய்திகள்

பால் டேங்கர் லாரியில் ரேஷன் அரிசி கடத்தல்: 4 பேர் கைது

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தை சேர்ந்த சந்திரசேகர்.  இவரது வீட்டில் இருந்து டேங்கர் லாரி மூலம் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக நெல்லிக்குப்பம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அந்த

VASUDEVAN.K

பால் டேங்கர் லாரியில் ரேஷன் அரிசி கடத்திய ரேஷன் கடை ஊழியர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தை சேர்ந்த சந்திரசேகர்.  இவரது வீட்டில் இருந்து டேங்கர் லாரி மூலம் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக நெல்லிக்குப்பம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அந்த லாரியை போலீஸார் இன்று காலை சோதனையிட்டனர். அப்போது டேங்கர் லாரிக்குள் மூட்டைகளில் ரேஷன் அரிசி இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

நெல்லிக்குப்பம் போலீசார் டேங்கர் லாரியை கைப்பற்றி உணவு கடத்தல் தடுப்பு போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீஸார் லாரி ஓட்டுநர் சுப்பிரமணி(45), சந்திரசேகர்(43) ஆகியோரை பிடித்து  விசாரணை நடத்தினர்.விசாரணையில் நெல்லிக்குப்பம் ரேஷன் கடை எண் 2-ன் விற்பனையாளர் கோவிந்தராஜ்(53), எடையாளர் ஜெயகுமார்(40) ஆகியோர் உதவியுடன் டேங்கர் லாரியில் ரேஷன் அரிசி கடத்தி சென்று ஆந்திராவில் கூடுதல் விலைக்கு விற்று வந்தது தெரியவந்தது.

இதைதொடர்ந்து கோவிந்தராஜ், ஜெயகுமார், சந்திரசேகர், சுப்பிரமணி ஆகிய பேரையும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்தனர். லாரியில் இருந்து 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.  ரேஷன் அரிசி கடலூரில் உள்ள தமிழ்நாடு உணவு பொருட்கள் பண்டக சாலை குடோனில் ஒப்படைக்கப்பட்டது.

ஆந்திர மாநில முன்னாள் அமைச்சருக்கு சொந்தமான லாரி:

ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்தவர் ராமச்சந்திரன். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் அம்மாநில முன்னாள் வனத்துறை அமைச்சர். இவருக்கு சொந்தமாக சித்தூரில் பால் பண்ணை உள்ளது. அங்கிருந்து கடலூர் அருகே உள்ள நெல்லிக்குப்பம் தனியார் சாக்லெட் தொழிற்சாலைக்கு டேங்கர் லாரி மூலம் பால் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த லாரி தான் இப்போது அரிசி கடத்தில் பிடிபட்டுள்ளது. விசாரணையின் போது லாரி டிரைவர் இந்த தகவலை தெரிவித்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review

தோ்தல் வந்துவிட்டால் பாஜக 'சோதனை' என்று சிபிஐயை பயன்படுத்தும்: கனிமொழி எம்.பி.

”மேஷ ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

Abhishek Sharma-விடம் Gautam Gambhir என்ன பேசினார்? | T20 World Cup Review

இஸ்ரேலுக்குச் செல்லும் பிரதமர் மோடி: நெதன்யாகுவுடன் புதன்கிழமை சந்திப்பு!

SCROLL FOR NEXT