முகப்பு
தற்போதைய செய்திகள்

அனுமதியின்றி வீடுகளில் பட்டாசு தயாரித்த 7 பேர் மீது வழக்கு பதிவு: ஒருவர் கைது

வெம்பக்கோட்டை  அருகே தாயில்பட்டி கலைஞர் காலனி குடியிருப்பு பகுதியில் அனுமதியின்றி பட்டாசுகள் தயாரிப்பதாக வெம்பக்கோட்டை போலீஸாருக்கு தகவல் வந்தது. அதன் அடிப்படையில் இன்று காவல் நிலைய ஆய்வாளர் செல்வம் தலைமையில் கிராமத்திற்கு திடீர் ரோந்து சென்றனர்.

Updated On : 12 மே 2013, 6:30 pm IST
பகிர்:

சாத்தூர் அருகே அனுமதியின்றி தனியார் குடியிருப்பு பகுதிகளில் பட்டாசுகளை தயார் செய்தது தொடர்பாக 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து, ஒருவரை மட்டும் வெம்பக்கோட்டை போலீஸார் கைது செய்தனர்.

வெம்பக்கோட்டை  அருகே தாயில்பட்டி கலைஞர் காலனி குடியிருப்பு பகுதியில் அனுமதியின்றி பட்டாசுகள் தயாரிப்பதாக வெம்பக்கோட்டை போலீஸாருக்கு தகவல் வந்தது. அதன் அடிப்படையில் இன்று காவல் நிலைய ஆய்வாளர் செல்வம் தலைமையில் கிராமத்திற்கு திடீர் ரோந்து சென்றனர். அப்போது, போலீஸார் வருவதை அறிந்து பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் தப்பியோடினார்கள்.பின்னர் அங்குள்ள காலனி வீடுகளில் சோதனையிட்ட போது பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டததற்கான அறிகுறிகள் தெரிந்தது. அதையடுத்து, அடுத்தடுத்த வீடுகளில் ஆய்வு செய்த போது 1000 கிலோ அளவிற்கு சரவெடி பட்டாசுகளை தயாரித்து வைத்திருந்ததை போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இக்கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ்(30), கோவிந்தராஜ்(34), கருப்பசாமி(30), மணிகண்டன்(55), ரவி உள்ளிட்ட 8 பேர் மீது வெம்பக்கோட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து, ஒருவரை மட்டும் போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.