உ.பி.க்கு கடத்த இருந்த 10 ஆயிரம் இலவச வேட்டி சேலைகள் பறிமுதல்
ஈரோட்டில் இன்று அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதில், உத்திரப் பிரதேச மாநிலம் கான்பூருக்குக் கடத்தப்படவிருந்த சுமார் 10 ஆயிரம் இலவச வேட்டி சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஈரோட்டில் இன்று அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதில், உத்திரப் பிரதேச மாநிலம் கான்பூருக்குக் கடத்தப்படவிருந்த சுமார் 10 ஆயிரம் இலவச வேட்டி சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ரவிக்குமார் என்பவர் பெயரில் அந்த பார்சல் பதிவு செய்யப்பட்டிருந்தது. அதனைக் கைப்பற்றிய அதிகாரிகள் அதில் இருந்த 4 ஆயிரம் இலவச சேலைகளைப் பறிமுதல் செய்தனர். மேலும், ஒரு குடோனில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேட்டி சேலைகள் பதுக்கப்பட்டிருப்பதாகத் தெரிய வந்ததை அடுத்து, அங்கே சோதனை மேற்கொண்டுள்ளனர்.