முகப்பு
தற்போதைய செய்திகள்

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குண்டர் சட்டத்தில் கைது

கும்மிடிப்பூண்டி அடுத்த தண்டலச்சேரி அருகே கடந்த 6ஆம் தேதி கட்டுமான கம்பிகள் ஏற்றிச் சென்ற லாரியின் டீசல் டேங்கை உடைத்து ஒரு கும்பல் தீவைத்து அந்த லாரியை சாம்பலாக்கியது

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:45 AM
பகிர்:

கும்மிடிப்பூண்டி அடுத்த தண்டலச்சேரி ஊராட்சியின் முன்னாள் தலைவரும் பா.ம.க பிரமுகருமான கிருஷ்ணமூர்த்தி(52) குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கும்மிடிப்பூண்டி அடுத்த தண்டலச்சேரி அருகே கடந்த 6ஆம் தேதி கட்டுமான கம்பிகள் ஏற்றிச் சென்ற லாரியின் டீசல் டேங்கை உடைத்து ஒரு கும்பல் தீவைத்து அந்த லாரியை சாம்பலாக்கியது. இது தொடர்பாக தண்டலச்சேரி ஊராட்சியின் முன்னாள் தலைவர் கிருஷ்ணமூர்த்தி உட்பட 15 பா.ம.க-வினர் கைது செய்யப்பட்டனர்.இந்நிலையில் முன்னாள் தலைவர் கிருஷ்ணமூர்த்தியின் மீது ஏற்கெனவே பேருந்து எரிக்கப்பட்ட சம்பவம் ஒன்றில் தொடர்பு இருப்பதாலும் இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரூபேஷ் குமார் மீனா பரிந்துரை செய்தனர். இதன் பேரில் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் முன்னாள் தலைவர் கிருஷ்ணமூர்த்தியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

தொடர்ந்து கிருஷ்ணமூர்த்தி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

முழு கட்டுரையைப் படிக்க →