பெட்ரோல் குண்டு வீசியும் அரிவாளால் வெட்டியும் ஊராட்சி மன்ற தலைவர் படுகொலை
கும்மிடிப்பூண்டி அடுத்த எல்லாபுரம் ஒன்றியம் கன்னிகைப்பேர் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகிப்பவர் திராவிட பாலு. எல்லாபுரம் ஒன்றிய முன்னாள் தி.மு.க செயலாளரான இவருக்கு செல்வி என்ற மனைவியும்,
தற்போதைய செய்திகள்பெட்ரோல் குண்டு வீசியும் அரிவாளால் வெட்டியும் ஊராட்சி மன்ற தலைவர் படுகொலை
கும்மிடிப்பூண்டி அடுத்த எல்லாபுரம் ஒன்றியம் கன்னிகைப்பேர் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகிப்பவர் திராவிட பாலு. எல்லாபுரம் ஒன்றிய முன்னாள் தி.மு.க செயலாளரான இவருக்கு செல்வி என்ற மனைவியும்,
கும்மிடிப்பூண்டி அடுத்த எல்லாபுரம் ஒன்றியம் கன்னிகைப்பேர் ஊராட்சி மன்ற தலைவர் திராவிடபாலு என்கிற பாலு(50) என்பவர் மீது இன்று காரில் வந்த மர்ம கும்பல் பெட்ரோல் குண்டு வீசியும் அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்தனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த எல்லாபுரம் ஒன்றியம் கன்னிகைப்பேர் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகிப்பவர் திராவிட பாலு. எல்லாபுரம் ஒன்றிய முன்னாள் தி.மு.க செயலாளரான இவருக்கு செல்வி என்ற மனைவியும், திருமணமான முருகன், மகேந்திரன் என்ற மகன்களும் கனிமொழி என்ற மகளும் உள்ளனர்.திராவிடபாலு வழக்கம் போல இன்று காலை 6 மணிக்கு நடைபயிற்சிக்காக வீட்டை விட்டு வெளியே வந்தார். நடை பயிற்சி முடித்து கன்னிகைப்பேர் சாலையில் உள்ள பாட்ஷா பாய் என்பவரது கறி கடையில் ஆட்டுக்கறி வாங்க கடையில் உட்கார்ந்து இருக்கிறார்.
அப்போது காரில் வந்த மர்மகும்பல் அந்த இறைச்சி கடை மீது பெட்ரோல் குண்டை வீசியது. இதனால் அந்த கடை முழுக்க புகையும் நெருப்பும் சூழந்த நிலையில் மர்ம கும்பல் ஊராட்சி மன்ற தலைவர் திராவிட பாலுவை அரிவாளால் கழுத்தில் உடலின் பல பகுதிகளில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். இதனால் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய திராவிட பாலுவை அவரது குடும்பத்தார் சென்னையில் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இந்த சம்பவத்தில் கறிக்கடைக்காரரான பாட்ஷா பாய் மற்றும் உடனிருந்த ஜம்பு ஆகிய இருவரும் காயமடைந்தனர்.
சம்பவம் அறிந்ததும் பெரியபாளையம் போலீஸார் அங்கு விரைந்தனர். மேலும் திருவள்ளூர் எஸ்.பி ரூபேஷ் குமார் மீனா, திருவள்ளூர் டி.எஸ்.பி பாலசந்திரன், ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி குமரவேலு சம்பவ இடம் விரைந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் காரில் வந்த 5 நபர்கள் இந்த கொலை சம்பவத்தை நடத்தியதும், கொலை செய்ததும் அவர்கள் சென்னை நோக்கி காரில் சென்றதும் தெரியவந்தது.
சாலை மறியல்:- சம்பவம் அறிந்ததும் திரண்ட கன்னிகைப்பேர் பொதுமக்கள் ஜனப்பன்சந்திரம்-பெரியபாளையம் சாலையில் மறியலில் ஈடுபட்டு தங்கள் ஊராட்சி மன்ற தலைவரை கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இதனால் அப்பகுதி வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு புதுவாயல் ஆரணி வழியே போக்குவரத்து திருப்பப்பட்டது. மேலும் கன்னிகைப்பேரில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டது.
25 வருடமாக ஊராட்சி மன்ற தலைவர் பதவி:- கடந்த 25 வருடமாக திராவிட பாலு மற்றும் அவரது மனைவி கன்னிகைப்பேர் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வந்துள்ளனர். திராவிட பாலு 3 முறையும் அவரது மனைவி செல்வி ஏற்கெனவே 2 முறையும் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் கன்னிகைப்பேர் பகுதியில் மக்கள் மத்தியில் நல்ல மதிப்பும் மரியாதையும் திராவிடபாலுவிற்கு உண்டு.