முகப்பு
தற்போதைய செய்திகள்

ஹோட்டல் காசாளர் கத்தியால் குத்திக் கொலை; ரவுடி சகோதரர்கள் கைது

அருப்புக்கோட்டையில் வியாழக்கிழமை இரவு உணவு பொட்டலம் கட்டுவதில் ஏற்பட்ட தகராறில் காசாளர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். அதை தடுக்க வந்த தொழிலாளிக்கு கத்தி குத்தில் படுகாயம் அடைந்தார். இது தொடர்பாக ரவுடி சகோதரர்கள் இருவரை போலீஸார் கைது செய்தனர்.

பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 5:23 PM

அருப்புக்கோட்டையில் வியாழக்கிழமை இரவு உணவு பொட்டலம் கட்டுவதில் ஏற்பட்ட தகராறில் காசாளர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். அதை தடுக்க வந்த தொழிலாளிக்கு கத்தி குத்தில் படுகாயம் அடைந்தார். இது தொடர்பாக ரவுடி சகோதரர்கள் இருவரை போலீஸார் கைது செய்தனர்.
    அருப்புக்கோட்டையில்-விருதுநகர் சாலையில் சோமசுந்தரம் என்பவர் ஹோட்டல் நடத்தி வருகிறார். இக்கடையில் இவரது உறவினர் சொக்கலிங்கம்(60) காசளாராக இருந்து வருகிறார். இந்நிலையில் இரவில் கடையை அடைக்கும் நேரம் 11.30 மணிக்கு இதே பகுதியில் பெரிய தெருவைச் சேர்ந்த ரவுடி சகோதரர்களான சரவணன்(40), ராஜா(41) ஆகிய இருவரும் டிபன் பொட்டல் வாங்குவதற்காக வந்துள்ளனர். பின்னர் கொஞ்சம் தாமதம் ஏற்பட்டதால் இருவரும் கோபமாக பேசி தகராறில் ஈடுபட்டனர்.
     அதையடுத்து, பொட்டலங்களை வாங்கிக் கொண்டவர்களிடம் காசளர் பணம் கேட்டுள்ளார். அதற்கு காசு எதுவும் கொடுத்து பழக்கமில்லையெனக் கூறியுள்ளனர். மேலும், அதட்டிக் கேட்கவே ராஜா என்பவர் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியால் சொக்கலிங்கத்தின் வயிற்றுப்பகுதியில் குத்தினார்.
    அதைத்  தடுக்க வந்த ஹோட்டல் தொழிலாளி சுரேஷ் என்பவருக்கும் கத்திக் குத்து விழுந்தது. அப்பகுதியில் இருந்தவர்கள் பிடிக்க சுற்றி வளைத்த போது, கத்தியால் குத்தி கொன்று விடுவேன் மிரட்டிக் கொண்டிருந்தனர். பின்னர் இது குறித்து திருநகரத்தைச் சேர்ந்த சங்கர் என்பவர் அருப்புக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதையடுத்து, விரைந்து வந்த போலீஸார் ரவுடி சகோதரர்கள் இருவரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். 
    அதையடுத்து, கத்திக்குத்தில் படுகாயம் அடைந்தவர்களை விரைவாக தூக்கிக் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு இடையிலேயே சொக்கலிங்கம் உயிரிழந்தார். இது தொடர்பாக ரவுடி சகோதரர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். ஏற்கனவே அருப்புக்கோட்டை, திருநகரம், வெள்ளைக்கோட்டை, பந்தல்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரவுடித்தனத்தில் ஈடுபட்டு பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.