வாகன சோதனையில் 3 லட்சத்து 75 ஆயிரம் அபராதம் வசூல்
கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பத்தில் உள்ள போக்குவரத்து சோதனை சாவடியில் போக்குவரத்து துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை அதிகாலை வரை நடத்திய வாகன சோதனையில் ரூபாய் 3 லட்சத்து 75ஆயிரம் அபராத தொகை வசூலிக்கப்பட்டது.
தற்போதைய செய்திகள்வாகன சோதனையில் 3 லட்சத்து 75 ஆயிரம் அபராதம் வசூல்
கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பத்தில் உள்ள போக்குவரத்து சோதனை சாவடியில் போக்குவரத்து துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை அதிகாலை வரை நடத்திய வாகன சோதனையில் ரூபாய் 3 லட்சத்து 75ஆயிரம் அபராத தொகை வசூலிக்கப்பட்டது.
கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பத்தில் உள்ள போக்குவரத்து சோதனை சாவடியில் போக்குவரத்து துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை அதிகாலை வரை நடத்திய வாகன சோதனையில் ரூபாய் 3 லட்சத்து 75ஆயிரம் அபராத தொகை வசூலிக்கப்பட்டது.
கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் போக்குவரத்து சோதனை சாவடியில் உள்ள பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் வாகனங்களுக்கான உள் போக்குவரத்து சோதனைச் சாவடி மற்றும் தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் வாகனங்களுக்கான வெளி போக்குவரத்து சோதனை சாவடியில் ஒரே நேரத்தில் வடக்கு மண்டல போக்குவரத்து இணை ஆணையர் பன்னீர்செல்வம் தலைமையில் வாகன சோதனை நடைபெற்றது.
இந்த சோதனையில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தரணி, தாமோதரன், இளங்கோவன், முனிராஜ் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஜெய் மனோகர், இளமுருகன் உட்பட 40 பேர் கொண்ட போக்குவரத்து அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.