திருச்சி விமான நிலையத்துக்கு வந்தார் முதல்வர் ஜெயலலிதா.
இன்று ஸ்ரீரங்கம் கோயிலை தரிசிப்பதற்காக வந்துள்ள முதல்வர் ஜெயலலிதா 4.20 மணி அளவில் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். அங்கிருந்து கார் மூலம் ஸ்ரீரங்கம் வரும் அவர், 5 மணிக்கு கோயிலுக்கு வருகிறார். அங்கே சுவாமி தரிசனம் முடிந்தபிறகு, மாலை 6 மணி அளவில் அஹோபில மடத்தில் புதிதாக பொறுப்பேற்றிருக்கும் புதிய ஜீயரை சந்தித்து ஆசி பெறுகிறார். பின்னர் இரவு 7 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு சென்னைக்குத் திரும்புகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.