இந்திரா காந்தி நினைவு தினம் : தமிழக காங்கிரஸார் மரியாதை
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் வியாழக்கிழமை அவரது உருவப் படத்துக்கு மாநிலத் தலைவர் ஞானதேசிகன் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இதே நாளில் முன்னாள் துணைப் பிரதமர் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளும் வருகிறது. ஆனால், இதுவரை அவரைக் கண்டுகொள்ளாத காங்கிரஸார் இந்த ஆண்டு இந்திரா படத்துக்கு அருகே பட்டேலின் படத்தையும் வைத்து மரியாதை செலுத்தினர்.
கடந்த 29-ஆம் தேதி ஆமதாபாத்தில் நடைபெற்ற விழாவில் பட்டேல் இந்தியாவின் முதல் பிரதமராகி இருக்க வேண்டும் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பேச, அந்த விழாவில் பங்கேற்ற பிரதமர் மன்மோகன் சிங், பட்டேல் காங்கிரஸ்காரர், மதச்சார்பற்றவர் என்று பதிலடி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement