விருதுநகர் அருகே ஆற்றில் மணல் அள்ளுவதில் முன்விரோதத்தினால் ஏற்பட்ட தகராறில் இளைஞரை கத்தியால் குத்தி படுகொலை செய்த மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் அருகே நல்லம்பட்டியைச் சேர்ந்த சுப்புராஜ் என்பவரின் மகன் கனகராஜ்(25). இவர் சொந்தமாக லாரி வைத்து மணல் அள்ளும் தொழில் செய்து வருகிறார். ஏற்கனவே இவருக்கும் இப்பகுதியில் உள்ள சிலருக்கும் அர்ச்சனா ஆற்றுப்பகுதியில் மணல் கடத்துவதில் முன்விரோதம் இருந்து வந்தது.இந்நிலையில், வெள்ளிக்கிழமை ஆவுடையாபுரம் ரயில்வே கேட் அருகே முள்காட்டிற்குள் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஒற்றையடிப் பாதையில் நடந்து செல்லும் பார்த்து வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதையடுத்து, உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து சுப்புராஜ் வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்தில் சந்தேகத்தின் பேரில் வேப்பம்பட்டியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மீது புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். ஏற்கனவே கொலை செய்யப்பட்ட கனகராஜ் மீது மணல் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதோடு, குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.