தற்போதைய செய்திகள்

மணல் லாரி உரிமையாளர் கொலைச் சம்பவம்: 4 பேர் கைது

விருதுநகர் அருகே ஆற்றில் மணல் அள்ளுவதில் முன்விரோதத்தினால் ஏற்பட்ட தகராறில் இளைஞரை பட்டாக் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக வச்சக்காரப்பட்டி போலீஸார்

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே ஆற்றில் மணல் அள்ளுவதில் முன்விரோதத்தினால் ஏற்பட்ட தகராறில் இளைஞரை பட்டாக் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக வச்சக்காரப்பட்டி போலீஸார் சனிக்கிழமை 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர் அருகே நல்லம்பட்டியைச் சேர்ந்த சுப்புராஜ் என்பவரின் மகன் கனகராஜ்(25). இவர் சொந்தமாக லாரி வைத்து மணல் அள்ளும் தொழில் செய்து வருகிறார். இவருக்கும் இப்பகுதியில் உள்ள சிலருக்கும் அர்ச்சனா ஆற்றுப்பகுதியில் மணல் கடத்துவதில் முன்விரோதம் இருந்து வந்ததாம்.இந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலையில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் வீடு திரும்பவில்லையாம். இதையடுத்து, ஆவுடையாபுரம் ரயில்வே கேட் அருகே  முள்காட்டிற்குள் பட்டாக் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு கிடந்தாராம்.

இது குறித்து சுப்புராஜ் வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்தில் சந்தேகத்தின் பேரில் வேப்பம்பட்டியைச் சேர்ந்த கோவிந்தராஜ் உள்ளிட்ட 4 பேர் மீது புகார் செய்தார். அதன் அடிப்படையில் வேப்பம்பட்டியைச் சேர்ந்த காட்டுராஜா(35), ஜெகதீசன்(40), கோவிந்தராஜ்(35) மற்றும் பட்டம்புதூர் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் ஆகியோரை போலீஸார் கைது செய்து கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

இன்று மாலை 6 மணிக்கு கந்தசஷ்டி கவசம் வாசிக்க வேண்டும்! - நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் மாளிகையில் ராஜாஜி சிலை திறப்பு!

தமிழகத்தில் மாவட்டவாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை! - முழு விவரம்

அரிஜித் சிங்கை மீண்டும் பாட வைத்த ஆமீர் கான்!

SCROLL FOR NEXT