முகப்பு
தற்போதைய செய்திகள்

மதுராந்தகத்தில்  அரசு பஸ் மோதி வியாபாரி  பலி

மதுராந்தகத்தை அடுத்த சிறுநல்லூர்  கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன்.  அவரது மகன் தேவதாஸ்  (வயது 40)   இவர் அப்பகுதியில்  பாத்திரங்களை  வாடகைக்கு விடும்  தொழிலை செய்து

Updated On : 10 நவம்பர், 2013 at 3:03 PM
பகிர்:
Updated On : 4 ஜனவரி, 2024 at 12:12 AM

மதுராந்தகத்தில்  அரசு பஸ் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற வியாபாரி  பலியானார்.

மதுராந்தகத்தை அடுத்த சிறுநல்லூர்  கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன்.  அவரது மகன் தேவதாஸ்  (வயது 40)  இவர் அப்பகுதியில்  பாத்திரங்களை  வாடகைக்கு விடும்  தொழிலை செய்து வருகிறார். சம்பவத்தன்று  தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து தனது கடைக்கு சென்றுக் கொண்டிருந்தார்.  அப்போது  மதுராந்தகம் நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாரதவகையில்  மோதியது. அதில்  சம்பவ  இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து  சித்தாமூர்  போலீசார்  வழக்கு பதிவு செய்து  விசாரித்து  வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.