தற்போதைய செய்திகள்

பூட்டியிருந்த வீட்டில் 39 சவரன் நகை திருட்டு

விருதுநகர் ஐ.சி.யூ காலனியைச் சேர்ந்தவர் நடராஜன்(45). இவர் விருதுநகர் சாத்தூர் சாலையில் பெயின்ட் கடையை நடத்தி வருகிறார். இந்த நிலையில் சனிக்கிழமை இரவு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன்

எஸ். பாண்டியன்

விருதுநகரில் பூட்டியிருந்த பெயிண்ட கடை அதிபர் வீட்டில் ஜன்னல் கதவுகளை உடைத்து 39 சவரன் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர் ஐ.சி.யூ காலனியைச் சேர்ந்தவர் நடராஜன்(45). இவர் விருதுநகர் சாத்தூர் சாலையில் பெயின்ட் கடையை நடத்தி வருகிறார். இந்த நிலையில் சனிக்கிழமை இரவு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் திரையரங்கிற்கு  இரண்டாவது படக்காட்சிக்கு சென்றிருந்தாராம். பின்னர் படக்காட்சி முடிந்து திரும்பி வந்து வீட்டை திறந்து பார்த்ததும்,  பின்புற ஜன்னல் உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் பீரோவும் கம்பியால் நெம்பி உடைத்து யாரோ அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் உள்ளேயிருந்த 39 சவரன் நகையை திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது. உடனே இது தொடர்பாக விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் நடராஜன் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து நகையை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்று மாலை 6 மணிக்கு கந்தசஷ்டி கவசம் வாசிக்க வேண்டும்! - நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் மாளிகையில் ராஜாஜி சிலை திறப்பு!

தமிழகத்தில் மாவட்டவாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை! - முழு விவரம்

அரிஜித் சிங்கை மீண்டும் பாட வைத்த ஆமீர் கான்!

தி.மு.க.வுக்கு இது ‘மாநாடு மாதம்’: முதல்வர் மு.க.ஸ்டாலின்

SCROLL FOR NEXT