சிதம்பரம் பொதுப்பணித்துறையை கண்டித்து நவ.29-ல் உண்ணாவிரதம்: இந்து ஆலய பாதுகாப்புக்குழு முடிவு
சிதம்பரம் நகரில் உள்ள தீர்த்த குளத்திற்கு வரும் கிளை வாய்க்கால்கள் தூர்வாரப்படாததை கண்டித்து சிதம்பரம் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு நவ.29-ல் உண்ணாவிரதம் போராட்டம் மேற்கொள்வது
சிதம்பரம் நகரில் உள்ள தீர்த்த குளத்திற்கு வரும் கிளை வாய்க்கால்கள் தூர்வாரப்படாததை கண்டித்து சிதம்பரம் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு நவ.29-ல் உண்ணாவிரதம் போராட்டம் மேற்கொள்வது என இந்து ஆலய பாதுகாப்புக்குழு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து இந்து ஆலய பாதுகாப்புக்குழுத் தலைவர் மு.செங்குட்டுவன் சிதம்பரம் உதவி ஆட்சியர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் உள்ளிட்டோருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
சிதம்பரம் நகரில் தற்போது ஏற்பட்டுள்ள நிலத்தடி நீர்மட்டம் குறைவால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும் சிதம்பரம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் உப்புநீர் கலந்து வருகிறது. எனவே தமிழக முதல்வரின் மழைநீர் சேகரிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக எதிர்கால குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு 80 ஆண்டுகளுக்கு பிறகு இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினர் பல்வேறு தொண்டு நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் சிதம்பரம் நகரில் உள்ள தீக்த்தகுளங்களான ஓமக்குளம், ஆனைக்குளம், தில்லைக்காளியம்மன் குளம் உள்ளிட்ட குளங்கள் முழுமையாக தூர்வாரப்பட்டது. இந்த குளங்களில் சுமார் 10 கோடி லிட்டர் தண்ணீரை சேமித்து வைக்கலாம். மேற்கண்ட குளங்களுக்கு பொன்னேரியிலிருந்து தண்ணீர் வரும் கிளை வாய்க்கால்கள் தற்போது ஆக்கரிமப்பில் தூர்ந்து போய் உள்ளது. இந்த வாய்க்கால்களை நல்ல முறையில் வெட்டி நிரந்தரமாக தண்ணீர் வர பொதுப்பணித்துறையினர் கோரிக்கை விடுத்தோம். இதுவரை நடவடிக்கை இல்லை.
எனவே வருகிற நவ.29-ம் தேதி வெள்ளிக்கிழமை சிதம்பரம் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு உண்ணாவிரதப் போராட்டமும், டிச.3-ம் தேதி செவ்வாய்க்கிழமை சிதம்பரம் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பும், டிச.4-ம் தேதி புதன்கிழமை உதவிஆட்சியர் அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டமும், டிச.5-ம் தேதி வியாழக்கிழமை இந்து ஆலய பாதுகாப்புக்குழு, மனித உரிமை மற்றும் ஊழல் தடுப்பு இயக்கத்துடன் இணைந்து காவல்துறை லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பளரை சந்தித்து பணி நடைபெறாமல் உள்ளதற்கான காரகணத்தை தெரிவித்தும், முக்கிய தகவல்களை அளிப்பதும் என முடிவு செய்துள்ளோம் என கடிதத்தில் மு.செங்குட்டுவன் தெரிவித்துள்ளார்.