தங்கை நகைக்கு வட்டியில்லாமல் பணம் தருவதாக ரூ.30 கோடி நகைகளை மோசடி செய்யப்பட்டதாக கூறப்பட்ட பெண் ஒருவர் சென்னையில் போலீஸாரிடம் சரண் அடைந்துள்ளார். இந்நிலையில் அவரிடம் 1350 சவரன் நகைகள் வாங்கிக் கொடுத்த சிதம்பரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அதிகளவு மாத்திரைகள் சாப்பிட்டு பல்கலைக்கழக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சிதம்பரம் லப்பத்தெருவைச் சேர்ந்த சையத் அகமது மனைவி சுக்கிரியாபானு . இவர் புத்தூரைச் சேர்ந்த ராஜி என்பவரது மூலம் கும்பகோணம் இந்திராநகரைச் சேர்ந்த தமிமுன் அன்சாமி மனைவி பாத்திமா நாச்சியாரிடம் தொடர்பு ஏற்பட்டது. அப்போது 1 பவுன் நகைக்கு 50 நாட்களுக்கு ரூ.1500 வீதம் வட்டியில்லாமல் பணம் தருவதாக தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் கடந்த ஒன்றரை ஆண்டில் 1350 சவரன் நகைகளை சுக்கிரியாபானு சிதம்பரம் பகுதியில் உள்ளவர்களிடம் வாங்கி கொடுத்துள்ளார்.
இந்நிலையில் பாத்திமா நாச்சியார் புகார் எழுந்து சென்னை போலீஸில் சரணடைந்ததால் அதிரிச்சியுற்ற சிதம்பரத்தைச் சேர்ந்த சுக்கிரியாபானு வியாழக்கிழமை இரவு வீட்டில் இருந்த மாத்திரைகளை அதிகமாக சாப்பிட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிதிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து நகர போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.