கார் மீது மரம் விழுந்து ஒருவர் படுகாயம்!
திருச்சி உறையூரைச் சேர்ந்த காளியப்பன் (49). சிதம்பரத்தில் உள்ள நண்பரை பார்க்க வந்த இவர் சனிக்கிழமை காலை சிதம்பரத்திலிருந்து திருச்சி நோக்கி காரில் சென்றார். அப்போது சிதம்பரம்-
சிதம்பரம் அருகே சனிக்கிழமை வீசிய பலத்த காற்றில் சாலையோர மரம் கார் மீது விழுந்து ஒருவர் படுகாயம் அடைந்து திருச்சி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
திருச்சி உறையூரைச் சேர்ந்த காளியப்பன் (49). சிதம்பரத்தில் உள்ள நண்பரை பார்க்க வந்த இவர் சனிக்கிழமை காலை சிதம்பரத்திலிருந்து திருச்சி நோக்கி காரில் சென்றார். அப்போது சிதம்பரம்-சேத்தியாத்தோப்பு சாலையில் உள்ள பொன்னங்கோயில் எனுமிடத்தில் சென்று கொண்டிருந்த போது பலத்த காற்றில் சாலையோர மரம் இவரது கார் மீது விழுந்ததில் படுகாயமுற்றார். காயமுற்ற காளியப்பன் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஒரத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.