முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் ஓமக்குளத்தில் கழிவுநீரை திறந்து விட்டதை கண்டித்து மக்கள் சாலைமறியல்!

சிதம்பரம் நகரில் உள்ள தீர்த்த குளத்தில் ஒன்றான ஓமக்குளத்தில் நகராட்சி கழிவுநீரை விட்டதை கண்டித்து அப்பகுதி மக்கள் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் சிதம்பரம்-காட்டுமன்னார்கோயில்

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:48 PM
பகிர்:

சிதம்பரம் நகரில் உள்ள தீர்த்த குளத்தில் ஒன்றான ஓமக்குளத்தில் நகராட்சி கழிவுநீரை விட்டதை கண்டித்து அப்பகுதி மக்கள் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் சிதம்பரம்-காட்டுமன்னார்கோயில் சாலையில் சுமார் 10 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சிதம்பரம் நகரில் தீர்த்த குளத்தில் ஒன்றான ஓமக்குளத்தை சமீபத்தில் இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினர் 80 ஆண்டுகளுக்கு பிறகு தூர்வாரினர். அப்போது 13-ம் நூற்றாண்டு செம்மண் மற்றும் சுடுமண் உறைகேணிகள் கண்டெடுக்கப்பட்டன. நாயன்மார்களில் ஒருவரான நந்தனார் ஹோமம் நடத்தி தீயில் இறங்கிய வரலாற்று சுவடுகளும் கிடைத்தன. இந்நிலையில் இந்த குளத்திற்கு நீர் வரும் கிளை வாய்க்கால்களை ஆலய பாதுகாப்புக்குழுவினர் தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் சனிக்கிழமை நகராட்சி கழிவுநீர் வாய்க்கால் உடைத்து குளத்தில் விட்டனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் கழிவுநீர் திறந்துவிட்டதை கண்டித்து சிதம்பரம்- காட்டுமன்னார்கோயில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் மற்றும் போலீஸார் சென்று பேச்சுவார்த்தை நடத்தி நகராட்சி அதிகாரிகளுக்கு தெரிவித்து, கழிவுநீர் விடுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை மேற்கொண்டதை அடுத்த மறியல் வாபஸ் பெறப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.