வேகமாக பரவி வரும் கோமாரி நோயை தடுத்து நிறுத்த வேண்டும்: தமிழக வாழ்வுரிமை கட்சி
காட்டுமன்னார்கோயிலில் அவர் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடையே தெரிவித்தது: கடலூர் மாவட்டம் வீராணம்ஏரியிலிருந்து திறக்கப்படும் நீர் பாசன வாய்க்கால்கள் தூர்வாரப் படாததால் விளை நிலங்களுக்கு
கடலூர் மாவட்டத்தில் கால்நடைகளிடம் வேகமாக பரவி வரும் கோமாரி நோயை தடுத்து நிறுத்த தமிழகஅரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில பொதுச்செயலாளர் வை.காவேரி தெரிவித்தார்.
காட்டுமன்னார்கோயிலில் அவர் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடையே தெரிவித்ததாவது:
கடலூர் மாவட்டம் வீராணம்ஏரியிலிருந்து திறக்கப்படும் நீர் பாசன வாய்க்கால்கள் தூர்வாரப் படாததால் விளை நிலங்களுக்கு சரிவர சென்றடையவில்லை. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பாசன வாய்க்கால்களை தூர் வார அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்ற மத்தியஅமைச்சர் சல்மான் குர்ஷித்தை கண்டிக்கிறோம். இனஉணர்வுக்காக போராடியதற்காக கைது செய்யப்பட்ட பழ.நெடுமாறனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வை.காவேரி தெரிவித்தார்.
பேட்டியின் போது துணைப் பொதுச்செயலாளர் உ.கண்ணன், மாநில பொறுப்பாளர்கள் பாலகுருசாமி, ராஜேந்திரன், மாவட்டச் செயலாளர் முடிவண்ணன், ஒன்றியச் செயலாளர் கே.ஆர்.ஜி.தமிழ்வாணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்