முகப்பு
தற்போதைய செய்திகள்

தனியார் தொழிற்சாலை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்து: 6 பேர் பலி -9 பேர் படுகாயம்

கும்மிடிப்பூண்டி அடுத்த சூரவாரிகண்டிகை-சின்னபுலியூர் இடையே தனியார் பிளாஸ்டிக் தொழிற்சாலையின் சுற்றுச்சுவர் சனிக்கிழமை இரவு இடிந்து விழுந்த விபத்தில் 6 வடமாநில தொழிலாளிகள் சம்பவ

தற்போதைய செய்திகள்

தனியார் தொழிற்சாலை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்து: 6 பேர் பலி -9 பேர் படுகாயம்

கும்மிடிப்பூண்டி அடுத்த சூரவாரிகண்டிகை-சின்னபுலியூர் இடையே தனியார் பிளாஸ்டிக் தொழிற்சாலையின் சுற்றுச்சுவர் சனிக்கிழமை இரவு இடிந்து விழுந்த விபத்தில் 6 வடமாநில தொழிலாளிகள் சம்பவ

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:49 PM
பகிர்:

கும்மிடிப்பூண்டி அடுத்த சூரவாரிகண்டிகை-சின்னபுலியூர் இடையே தனியார் பிளாஸ்டிக் தொழிற்சாலையின் சுற்றுச்சுவர் சனிக்கிழமை இரவு இடிந்து விழுந்த விபத்தில் 6 வடமாநில தொழிலாளிகள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் இந்த விபத்தில் 9 வடமாநில தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த சூரவாரிகண்டிகை-சின்னபுலியூர் இடையே மைக்கோ பிளாஸ்ட் என்ற தனியார் பிளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்றின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த தொழிற்சாலையின் 9 அடி சுற்றுச்சுவரை ஒட்டி தொழிற்சாலையின் கட்டுமான பணிகளை செய்து வந்து வடமாநில தொழிலாளர்கள் தங்குவதற்கு தென்னங்கீற்றால் வேயப்பட்ட குடிசைகள் கட்டப்பட்டு இருந்தது. இந்த குடிசைகளில் 26 பேர் வசித்து வந்தனர்.

இந்நிலையில் சனிக்கிழமை முழுக்க பெய்து வந்த மழையின் காரணாக அந்த தொழிற்சாலையின் சுற்றுசுவரில் சுமார் 40 அடி சுவர் வலுவிழந்து சுற்றுச்சுவரை ஒட்டி இருந்த குடிசைகளின் மீது விழுந்து விட்டது. இதனால் இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளிகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கதார் ஓடி வந்து இடுபாடுகளில் இருந்து தப்பியவர்களை மீட்டதோடு கவரப்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து போலீஸôர் இடிபாடுகளை அகற்றிய போது விபத்தில் இடிபாடுகளில் சிக்கி ஒரிசா மாநிலத்தை சேர்ந்த சோனு(36), சுக்தேவ்(20), பல்ராம்(19), ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மந்தீப்குமார்(18), ஸ்ரீ நாராயணன்(18), பீகார் மாநிலத்தை சேர்ந்த பாப்புகுமார்(20) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானது தெரியவந்தது.

மேலும் விபத்தில் பலத்த காயமடைந்த நரேஷ்(35), லோகன்(50), உமேஷ்(35), உதய்சங்கர்(14), சன்யாசி(20), சாமுரு(19), சந்தோஷ்(32), சாம்(50), சஞ்சய்(22) ஆகியோர் பலத்த காயமடைந்த நிலையில் அவர்களையும் மீட்ட போலீஸôர் அவர்களை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்..

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி வீரராகவராவ், எஸ்.பி ரூபேஷ்குமார் மீனா, கோட்டாட்சியர் பார்த்திபன், வட்டாட்சியர் அப்துல் ரஹீம் ஆகியோர் விரைந்து விபத்து குறித்து விசாரணை நடத்தினர். விபத்துக்கு காரணமான அந்த சுற்றுச்சுவர் கான்கிரீட்டால் அமைக்கப்படாமல் ஹாலோ பிளாக் எனப்படும் அச்சுக்கற்களால் அமைக்கப்பட்டிருந்த நிலையில் மழையின் காரணமாக அந்த சுற்றுச்சுவர் இருந்த பகுதியில் மண்அரிப்பு ஏற்பட்டு சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இந்த விபத்து தொடர்பாக கவரப்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →