தச்சூர் அருகே சாலை விபத்து - 10 பெண்கள் படுகாயம்
கும்மிடிப்பூண்டி அடுத்த தச்சூர் அருகே திங்களன்று இரவு நடைபெற்ற சாலை விபத்தில் 10 பெண்கள் படுகாயமடைந்தனர்.
தற்போதைய செய்திகள்தச்சூர் அருகே சாலை விபத்து - 10 பெண்கள் படுகாயம்
கும்மிடிப்பூண்டி அடுத்த தச்சூர் அருகே திங்களன்று இரவு நடைபெற்ற சாலை விபத்தில் 10 பெண்கள் படுகாயமடைந்தனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த தச்சூர் அருகே திங்களன்று இரவு நடைபெற்ற சாலை விபத்தில் 10 பெண்கள் படுகாயமடைந்தனர்.
கும்மிடிப்பூண்டி அருகே சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் பஞ்செட்டி அருகே அத்திப்பேடு பகுதியில் தலை முடி பதப்படுத்தப்படும் தொழிற்சாலையில் பொன்னேரி, குண்ணம்பேடு, வெள்ளவேடு, ஆண்டார்குப்பம் பகுதியில் இருந்து 10 பெண்கள் பணி செய்து வருகின்றனர். இவர்கள் தினமும் வேலைக்கு டாடா மேஜிக் வாகனத்தை வாடகைக்கு அமர்த்தி தினமும் வேலைக்கு சென்று அதே வாகனத்தில் வீடு திரும்புவர்.
இந்நிலையில் திங்களன்று வேலை முடிந்து இவர்கள் வீடு திரும்பும் போது தச்சூர் -பொன்னேரி சாலைக்கு திரும்ப போரக்ஸ் என்ற பகுதியில் டாடா மேஜிக் வாகனம் எதிர்புற சாலைக்கு திடீரென திரும்பியது.
அப்போது எதிர்புறமாக கும்மிடிப்பூண்டி அடுத்த குருத்தானமேடு பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் இருந்து ஊழியர்களை ஏற்றிக் கொண்டு பஸ் வந்துக் கொண்டிருந்தது.
எதிர்புற சாலையில் பேருந்து வருவதை கவனிக்காமல் டாடா மேஜிக் ஓட்டுனர் வாகனத்தை திருப்பியதால் அந்த தனியார் தொழிற்சாலை பேருந்து டாடா மேஜிக் வாகனத்தின் மீது மோதி இழுத்து சென்றது. இந்த விபத்தில் டாடா மேஜிக் வாகனத்தில் இருந்த லஷ்மி(38), வனஜா(30), தேவி(25), தேவி(31), ஜமுனா(30), மகாலட்சுமி(45), மலர்(35), விஜயா(35), இந்திரா(40), நிவேதா(19) ஆகியோர் படுகாயமடைந்தனர்.
சம்பவம் அறிந்து கவரப்பேட்டை போலீஸôர் விபத்து நடைபெற்ற இடத்திற்கு விரைந்து படுகாயமடைந்த 10 பெண்களையும் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த விபத்து குறித்து கவரப்பேட்டை போலீஸôர் விசாரணை நடத்தி வருகின்றனர்.