முகப்பு
தற்போதைய செய்திகள்

வயல்வெளியில் பிடித்த இரு கொக்குகள் பறிமுதல்: வனத்துறையினர் நடவடிக்கை

கிராமப்புற பகுதிகளில் பறவைகள் வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து சிதம்பரம் வனக் காப்பாளர்கள் எம்.ராஜேஷ்குமார், டி.பழனிவேல், சிவக்குமார் மற்றும் களப்பணியாளர்கள் சனிக்கிழமை

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:55 PM
பகிர்:

காட்டுமன்னார்கோயில் அருகே வயல்வெளியில் பிடித்த கொக்குகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

கிராமப்புற பகுதிகளில் பறவைகள் வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து சிதம்பரம் வனக் காப்பாளர்கள் எம்.ராஜேஷ்குமார், டி.பழனிவேல், சிவக்குமார் மற்றும் களப்பணியாளர்கள் சனிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது காட்டுமன்னார்கோயில் அருகே எடையார் கிராமத்தில் வயல்வெளியில் குஞ்சமேடு கிராமத்தைச் சேர்ந்த இளங்கோவன் (35) வயல்வெளியில் வலை விரித்து இரு கொக்குகளை பிடித்துக் கொண்டிருக்கும் போது வனத்துறையினரிடம் பிடிபட்டார். பின்னர் வனத்துறையினர் அவரிடமிருந்து இரு கொக்குகளை பறிமுதல் செய்து, இளங்கோவன் மீது வழக்குப் பதிந்து ரூ.2ஆயிரம் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது. பின்னர் இரு கொக்குகளையும் உயிருடன் வயல்வெளியில் பறக்க விடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.