முகப்பு
தற்போதைய செய்திகள்

4 போலீஸ் அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவல் பதக்கங்கள்

கள்ளச்சாராய ஒழிப்புப் பணியில் ஈடுபட்ட நான்கு போலீஸ் அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவல் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.இது குறித்து தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலாளர் நிரஞ்சன்

Updated On : 1 அக்டோபர், 2013 at 8:51 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 11:32 PM

கள்ளச்சாராய ஒழிப்புப் பணியில் ஈடுபட்ட நான்கு போலீஸ் அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவல் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.இது குறித்து தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவுப்படி, கள்ளச்சாராய ஒழிப்புப் பணியில் சிறப்பாக செயல்பட்ட ஈரோடு மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஏ.டி.எஸ்.பி. சுரேஷ்குமார், சென்னை தெற்கு மத்திய புலனாய்வுப் பிரிவு டி.எஸ்.பி.யான ஏ.வி. மதி, சேலம் மண்டல மத்திய புலனாய்வுப் பிரிவு இன்ஸ்பெக்டர் ச. பெரியசாமி, ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் காவல் நிலைய தலைமைக் காவலர் ஆர். தேவராஜ் ஆகியோருக்கு காந்தியடிகள் காவலர் பதக்கங்கள் வழங்கப்படும்.2014-ஆம் ஆண்டு நடைபெறும் குடியரசு தின விழாவில் வழங்கப்படும் இந்த பதக்கங்களுடன் ரூ. 20 ஆயிரம் பரிசுத் தொகையும் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.