கருப்பசாமி பாண்டியன் மீது புகார் அளித்த பெண்ணின் சகோதரர் தற்கொலை முயற்சி
நெல்லை மாவட்ட தி.மு.க. செயலர் கருப்பசாமி பாண்டியன் மீது பாலியல் புகார் அளித்த திமுக பிரமுகரின் மகள் தமிழரசியின் சகோதரர் திடீரென விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். இது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழரசி என்ற அந்தப் பெண்ணின் சகோதரர் குறளமுதன் (32), நெல்லை மாவட்ட திமுக மாணவர் அணி பொறுப்பில் உள்ளார். இவர் நெல்லை டவுன் பகுதியில் உள்ள தனது வீட்டில் இன்று திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவர் உடனே ஆபத்தான நிலையில் நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.