விருதுநகர் அருகே கேப் வெடி ஆலையில் விபத்து பெண் காயம்
விருதுநகர் அருகே தனியார் கேப் வெடி ஆலையில் ஏற்பட்ட விபத்தில் சனிக்கிழமை மாலையில் பெண் தொழிலாளி ஒருவர் காயம் அடைந்தார்.
விருதுநகர் அருகே தனியார் கேப் வெடி ஆலையில் ஏற்பட்ட விபத்தில் சனிக்கிழமை மாலையில் பெண் தொழிலாளி ஒருவர் காயம் அடைந்தார்.
விருதுநகர் அருகே துளுக்கப்பட்டியில் தனியார் கேப் வெடி ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் மாலையில் வழக்கம் போல் கேப் வெடிகளை பாக்கெட் போடும் பணியில் பெண்கள் ஈடுபட்டிருந்தனர். இப்பணியில் ஆவுடையாபுரம் கிராமத்தைச் சேர்ந்த அழகுமுத்து மனைவி லட்சுமி(40) என்பவர் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது உராய்வு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டதில் லட்சுமி படுகாயம் அடைந்தார். உடனே ஆலை நிர்வாகத்தினர் மீட்டு விருதுநகர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இது தொடர்பாக வச்சக்காரப்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.